அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில்  மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு

விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டிகளில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பேர் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On :11 அக்டோபர் 2014, 2:31 am

விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டிகளில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் பேர் சிறப்பிடம் பெற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளிடையே தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், படைப்புத் திறமைகளை வளர்க்கவும் பல்வேறு வகையான போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டுக்கான போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு ஆகிய போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
இதில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:

கவிதைப் போட்டி: இப்போட்டியில் விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 மாணவி மா.ஆர்த்திபானு முதலிடமும், இதே ஊரில்  கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்1 மாணவர் கே.ராஜாஜி இரண்டாம் இடமும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டி: இதே போல் கட்டுரைப் போட்டியில் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்2 மாணவி கந்த காமாட்சி முதலிடமும், ஸ்ரீவில்லிபுத்தூர் இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்2 மாணவி நா.சுப்புலட்சுமி 2-ம் இடமும் பெற்றனர்.

பேச்சுப் போட்டி: ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியின் மாணவி வே.ஜான் ஜோஸ்பின் முதலிடமும், ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.உலகமாதவன் 2ஆம் இடமும் பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், 2ஆம் பரிசாக ரூ.7 ஆயிரத்தையும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பசுன்பொன் வழங்கினார். மேலும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை அடுத்த மாதம் மாநில அளவில் நடத்தப்பட உள்ள போட்டிகளில் பங்கேற்க தமிழ் வளர்ச்சித் துறையால் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.